பருப்பு கத்திரிக்காய்
தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ, துவரம்பருப்பு - அரை கப், மிளகாய் வற்றல்- 4, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - அரை கப்.
செய்முறை: இதுவும் ஒருவிதமான எண்ணெய் கத்திரிக்காய்தான். துவரம்பருப்பை ஊற வைத்துதண்ணீரை வடித்துவிட்டு உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். கத்திரிக்காய்ஒன்றை நான்காக வகிர்ந்து (பிளந்து) கொள்ளவும். காயை 10-15 நிமிடங்கள் அரிசி கழுவிய நீரில்ஊற விடவும். கத்திரிக்காயை வெளியே எடுத்து அரைத்த மசாலாவைக் காயினுள் திணிக்கவும்.சட்டியில் தாளித்து போட்டு மசாலா திணித்த கத்திரிக்காயைச் சேர்த்து குறைந்த தீயில் வதக்கிஇறக்கவும்.குறிப்பு: காயை ஆவியில் கொஞ்ச நேரம் வேக வைத்தும் வதக்கலாம். இவ்விதம் செய்தால் சீக்கிரம்வதங்கி விடும். எண்ணெய் குறைவாகச் செலவாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பருப்பு கத்திரிக்காய், 30 வகையான பொரியல், 30 Type Poriyal, எண்ணெய், Recipies, சமையல் செய்முறை