தக்காளி பொரியல்
தேவையானவை: தக்காளி (நன்கு பழுத்தது) - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, மிளகாய்தூள் - முக்கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பூண்டு - முழுதாக1, கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பூண்டை உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும், பச்சை மிளகாயையும்,வெங்காயத்தையும் நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைத் துண்டுகளாக நறுக்கவும். கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கிதக்காளியைச் சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் உப்பு, மிளகாய்தூள் சேர்த்துப் பிரட்டி இறக்கிமல்லி சேர்க்கவும்.குறிப்பு: பிரியப்பட்டால் இறக்கும் முன், கால் மூடி தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி பொரியல், 30 வகையான பொரியல், 30 Type Poriyal, , Recipies, சமையல் செய்முறை