சிறு கிழங்கு பொரியல் - 2

தேவையானவை: சிறு கிழங்கு - கால் கிலோ, மிளகு பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையானஅளவு. தாளிக்க: கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா சிறிதளவு, எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சின்னக் கிழங்காகப் பொறுக்கி, மண்போகக் கழுவி வேக விடவும். வெந்த கிழங்கைத்தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் தாளித்துப் போட்டுக் கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.கிழங்கு வதங்கியதும் உப்பு, மிளகு பொடி சேர்த்துப் பிரட்டி, வதக்கி இறக்கவும். விரைவாகவும்எளிதாகவும் செய்யக்கூடிய பொரியல் இது.குறிப்பு: எந்தக் கிழங்கையுமே முதல்நாள் இரவே தண்ணீரில் போட்டு வைத்து, காலையில்கழுவினால் மண் சுத்தமாகப் போய்விடும். சீக்கிரமும் வேகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறு கிழங்கு பொரியல் - 2, 30 வகையான பொரியல், 30 Type Poriyal, , Recipies, சமையல் செய்முறை