சேப்பங்கிழங்கு பொரியல்
தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு. மசாலாவிற்கு:வரமிளகாய் - 4, சின்ன வெங்காயம் - ஏழெட்டு, சீரகம் - அரை டீஸ்பூன், புளி - 1 சுளை.தாளிக்க: எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்.
செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.தோல் உரிக்க வருகிற அளவு வெந்தால் போதும். மசாலாவிற்கு உள்ள சாமான்களை அரைத்துக்கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய கிழங்கை வதக்கவும். அரைத்த மசாலாசேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.குறிப்பு: எப்பொழுதுமே கிழங்கு வகைகளை தோல் உரிக்க வருகிற அளவிற்குத் தான் வேகவைக்கவேண்டும். நன்றாக வெந்தால் பொரியல் கொழகொழவென்று மசியல் போல் ஆகிவிடும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேப்பங்கிழங்கு பொரியல், 30 வகையான பொரியல், 30 Type Poriyal, தோல், டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை