மிக்ஸட் வெஜிடபிள் பொரியல்
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பழுத்த தக்காளி - 2,பச்சைப் பட்டாணி - 50 கிராம், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன், கறிமசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லி இலை -சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.பச்சைப் பட்டாணியையும் உரித்து வேகவைக்கவும். வெங்காயத்தை நீளநீளமாகவும், ஒருதக்காளியை எட்டு துண்டுகளாகவும் நறுக்கவும். வாணலியில் தாளித்து போட்டு வெங்காயம்,தக்காளிப்பழத்தை வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்க்கவும். உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும். வதங்கியதும் கறி மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும். பிறகு கரம்மசாலாத்தூள் சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்க்கவும். இதுவும் ஒரு ‘மல்ட்டி பர்பஸ்’ சைட்-டிஷ்தான்.குறிப்பு: பிரியப்பட்டால் கறி மசாலாத்தூளுடன் ஒரு கை கடலைமாவும் சேர்த்துத் தூவலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிக்ஸட் வெஜிடபிள் பொரியல், 30 வகையான பொரியல், 30 Type Poriyal, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை