சிறு கிழங்குப் பொரியல் - 1

தேவையானவை: சிறு கிழங்கு - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா தேவையான அளவு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். மசாலாவிற்கு: வரமிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய்துருவல் - கால் மூடி, சின்ன வெங்காயம் - ஐந்தாறு, பூண்டு - 2 பல்,
செய்முறை: சிறு கிழங்கை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் தோல் நீக்கிகீற்றாக அதாவது சின்னச் சின்னத் துண்டுகளாக அரிந்து வேக விடவும். காய் வெந்ததும் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கித் தண்ணீரை வடித்து விடவும். வாணலியில்கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய காயை வதக்கவும். மசாலாவிற்கானபொருட்களை அரைக்கவும். காய் வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்துப் பிரட்டிக் கொஞ்ச நேரம்சிறு தீயில் வைத்திருந்து இறக்கவும். இந்தப் பொரியலுக்காக உங்களுக்கு ‘சமையலரசி’ பட்டம்கிடைக்கப் போவது நிச்சயம்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறு கிழங்குப் பொரியல் - 1, 30 வகையான பொரியல், 30 Type Poriyal, கால், Recipies, சமையல் செய்முறை