கடலைமாவு தயிர் பூரி
தேவையானவை: கடலை மாவு - 2 கப், தயிர் - அரை கப், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன்,மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன், தனியாதூள் -அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, ஓமம் - அரை டீஸ்பூன், பெருங் காயத்தூள் - ஒருசிட்டிகை, தண்ணீர் - சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கதேவை யான அளவு.
செய்முறை: எண்ணெய் தவிர மீதி எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, பூரிகளாகத்தேய்த்துப் போட்டு பொரித்தெடுக்க வும். ‘மசாலா தயிர்’ (மிளகாய் தூள், உப்பு, வறுத்த சீரகத்தூள்சேர்த்தது) இதற்கான சூப்பர் சைட்-டிஷ்.குறிப்பு: கருஞ்சீரகம், வட இந்தியர்கள் வாசத்துக்காகவும் சுவைக்காகவும் அதிகம்பயன்படுத்துவார்கள். நாட்டு மருந்துக் கடைகளிலும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் களிலும் இதுகிடைக்கும். அது கிடைக்காதபட்சத்தில், சீரகத்தை உபயோகிக்கலாம்.பூரி மாவு பிசையும்போது சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்ப்பதால், மாவு தொட்டுத் திரட்டத்தேவையில்லை. அதனால், எண்ணெயில் மாவு சேர்ந்து கருகும் வாய்ப்பு குறைவு.மாவு பிசையும்போது மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், இளக்கமாகவும் இல்லாமல் (சப்பாத்திக்குபிசைவதை விட கெட்டியாக) இருக்கவேண்டும். அப்போதுதான், பூரி ‘புஸ்’ஸென்று எழும்பும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலைமாவு தயிர் பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, டீஸ்பூன், மாவு, எண்ணெய், Recipies, சமையல் செய்முறை