சர்க்கரை வள்ளிக்கிழங்கு பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், உப்பு - ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை - 5டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு (பெரியதாக) - 1, நெய் -ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன், உப்பு, நெய் கலந்து பிசைந்து வைக்கவும். சர்க்கரைவள்ளைக்கிழங்கை தோல் சீவி, வேகவைத்து மசித்துக்கொள்ளவும். அதனுடன், பொடித்த சர்க்கரை மற்றும்ஏலக்காய்தூளையும் சேர்த்துக் கலக்கவும். வழக்கமான முறையில், கோதுமை மாவில் கிழங்குபூரணத்தை வைத்து, பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும். பொடித்த சர்க்கரையைத் தூவிபரிமாறவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, பொடித்த, கோதுமை, Recipies, சமையல் செய்முறை