பொட்டுக்கடலை பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், உப்பு -சுவைக்கேற்ப, ஓமம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை (மூன்றும் பொடியாகநறுக்கியது) - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசையவும். பொட்டுக்கடலைமாவுடன், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை ஓமம், உப்பு சேர்த்து கலந்து பூரணம் தயாரிக்கவும்(அது உதிராகத்தான் இருக்கும்). கோதுமை மாவில் சிறு உருண்டைகள் செய்து, பொட்டுக்கடலைபூரணத்தை உள்ளே வைத்து, பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும். இதற்கு, மசாலா தயிர்,ஊறுகாய், பச்சை சட்னி, தக்காளி சாஸ் ஏதேனும் ஒன்றை தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொட்டுக்கடலை பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, பச்சை, உப்பு, கோதுமை, Recipies, சமையல் செய்முறை