கலந்த மாவு பூரி
தேவையானவை: கோதுமை மாவு - ஒன்றேகால் கப், மைதா மாவு - கால் கப், கடலை மாவு -கால் கப், சோயா மாவு - கால் கப், கேழ்வரகு மாவு - கால் கப், சோள மாவு - கால் கப், ஓமம்,சீரகம், கருஞ்சீரகம் - தலா அரை டீஸ்பூன், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எல்லா மாவுகளையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அத்துடன் இஞ்சி-பச்சை மிளகாய்விழுது, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், மல்லித்தழை, எண்ணெய் கலந்து பிசைந்து, பூரிகளாக தேய்த்துப்பொரித்தெடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் நன்றாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலந்த மாவு பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, மாவு, கால், டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை