வெஜிடபிள் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் (மூன்றும் பொடியாகநறுக்கியது) - அரை கப், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கியமல்லித்தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, கரம் மசாலாதூள் - கால்டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் அல்லது நெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு -கால் டீஸ்பூன்.
செய்முறை: கோதுமை மாவை உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்துவைத்துக் கொள்ளவும்.காய்கறிகளை லேசாகத் தண்ணீர் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். அத்துடன்இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, மல்லித்தழை, கரம் மசாலாதூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து,கெட்டியாகக் கிளறி வைத்துக்கொள்ளவும். மாவை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, நடுவே குழிபோல செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காய்கறி பூரணத்தை வைத்து மூடி, பூரிகளாகத் தேய்க்கவும்.காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெஜிடபிள் பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, டீஸ்பூன், சேர்த்து, எண்ணெய், Recipies, சமையல் செய்முறை