கடலைப்பருப்பு ஸ்வீட் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை,கடலைப் பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 6டேபிள் ஸ்பூன் அல்லது பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், நெய் -ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு இரண்டையும் கலந்து துளி உப்பு, தண்ணீர் சேர்த்துப்பிசையவும். கடலைப்பருப்பை வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில்நெய்யைச் சூடாக்கி, கடலைப்பருப்பு, பொடித்த சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள்சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவை சிறு உருண்டைகளாக்கி, உள்ளே பூரணம் வைத்து, மூடி,பூரிகளாகத் தேய்த்து பொரித் தெடுக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலைப்பருப்பு ஸ்வீட் பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, மாவு, பொடித்த, Recipies, சமையல் செய்முறை