முளைப்பயறு பூரி
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், உப்பு - சுவைக்கேற்ப,பாசிப்பயறு - அரை கப், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன்,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, ஒருதுணியில் கட்டிவைக்கவும். மறுநாள் நன்கு முளைவிட்டுவிடும். முளைகட்டிய பயறை சீரகம் சேர்த்து,கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைத்த பயறு,இஞ்சி-பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.கோதுமை மாவையும் மைதா மாவையும் உப்பு சேர்த்து கலந்து, தண்ணீர் சேர்த்துப்பிசைந்துகொள்ளவும். அதை செப்புகளாகச் செய்து, நடுவே முளைப்பயறுப் பூரணத்தை வைத்து,பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும். (குறிப்பு: பயணங்களுக்கு இதை எடுத்துச்செல்வதென்றால், பயறுக் கலவையை நன்கு வதக்கவேண்டும்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முளைப்பயறு பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை