நிலக்கடலை பாயசம்
தேவையானவை: நிலக்கடலை - ஒரு கப், வெல்லம் (பொடித்தது) - ஒன்றரை கப், பால் - 4 கப்,ஏலக்காய் பொடித்தது - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நிலக்கடலையை வறுத்து மிக்ஸியில் லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். பிறகுவெல்லத்தை நீர்விட்டு கரைத்து வடிகட்டி, பொடித்த கடலையுடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும். அதனுடன் பாலையும் விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்குங்கள். பொடித்தஏலக்காயையும் நெய்யையும் கலந்து பரிமாறவும்.பாயசத்துக்கு சுவை கூட்ட சில குறிப்புகள்..பாயசத்துக்கு பாலை வற்றவிடும்போது, சிறு தீயில் காய்ச்சினால் நன்றாக இருக்கும்.பாலில் வேகவைக்கக் கூடிய அவல், அரிசி போன்றவற்றையும் தீயைக் குறைத்து வேகவிட,சுவை கூடும்.பாலை வற்றவிடாமலேயே, பால் சுண்டும்போது வரும் நிறம் (லைட் பிங்க்) தேவை எனில், ஒருடீஸ்பூன் சர்க்கரையை வெறும் கடாயில் அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் மெதுவாகககரையவிடுங்கள். கரைந்ததும் கருகிவிடாமல் பாயசத்தில் சேருங்கள். பாலை சுண்டவைத்தஎஃபெக்ட் கிடைக்கும்.சூடாகப் பரிமாறும் பாயசங்களை விட, குளிரவைத்துப் பரிமாறும் பாயசங்களுக்கு சர்க்கரைசிறிது அதிகம் தேவை. உதாரணமாக, ஒரு கப் போடும் இடத்தில், ஒன்றேகால் கப் போடலாம்.கண்டென்ஸ்டு மில்க் வாங்கிச் சேர்க்க முடியாதபட்சத்தில், பாலையே இன்னும் சிறிது அதிகமாகச்சேர்த்து, நன்கு வற்றக் காய்ச்சிக் கொண்டால் அதே சுவை கிடைக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலக்கடலை பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, பாலை, சுவை, Recipies, சமையல் செய்முறை