அத்திப்பழ பாயசம்

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், தேன் - கால் கப், பொடியாக நறுக்கியஅத்திப்பழம் - அரை கப், பொடியாக நறுக்கிய பாதாம்பருப்பு - கால் கப், ஏலக்காய்தூள் - கால்டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: ஒரு கப் பாலில், பதப்படுத்திய அத்திப்பழமாக இருந்தால், அரை மணி நேரம்ஊறவையுங்கள். அரை கப் கொதிக்கும் தண்ணீரில் பாதாமை 5 நிமிஷம் ஊறவைத்து தோல்நீக்குங்கள். மீதி உள்ள பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். பாதாமையும் அத்திப்பழத்தையும்(அத்திப்பழம் ஊறவைத்த பாலுடன் சேர்த்து) மிக்ஸியில் அரைத்தெடுங்கள். அரைத்த கலவையை,அடுப்பில் உள்ள பாலுடன் சேர்த்துக் காய்ச்சுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் காய்ந்ததும் இறக்கி,சிறிது ஆறியதும், தேன், ஏலக்காய்தூள், ஜாதிக்காய்தூள் சேர்த்துக் கலந்து குளிரவைத்துப்பரிமாறுங்கள்.குறிப்பு: ஃப்ரெஷ் அத்திப்பழமாக இருந்தால், பாலுடன் சேர்த்து அப்படியே அரைக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்திப்பழ பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, பாலுடன், சேர்த்துக், Recipies, சமையல் செய்முறை