பீட்ரூட் பாயசம்

தேவையானவை: பீட்ரூட் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், பால் - 4 கப், முந்திரிப்பருப்பு -சிறிதளவு, நெய் - சிறிதளவு, ஏலக்காய் எஸன்ஸ் - 2 சொட்டு.
செய்முறை: பீட்ரூட்டை நன்கு தோல் சீவி கழுவி, அதை துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் வேகவையுங்கள். பின் அதை மிக்ஸியில் மைபோல் அரைத்து அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்துநன்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன் முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்துப்போட்டு எஸன்ஸ§ம் விட்டு இறக்கிவிடுங்கள்.சிவப்பு நிற பீட்ரூட்டாக இருந்தால்தான் பாயசத்தின் கலரைப் பார்த்தவுடனே அனைவரையும் சுண்டிஇழுக்கும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய, வைட்டமின் சத்து நிறைந்த பாயசம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீட்ரூட் பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, , Recipies, சமையல் செய்முறை