தினை அரிசி பாயசம்

தேவையானவை: தினை அரிசி - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், பால் - 2 டம்ளர்,முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - 10, குங்குமப்பூ, நெய், கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு - தலாசிறிதளவு.
செய்முறை: தினை அரிசியை சுத்தம் செய்து, நன்கு வாசம் வர வறுத்து, பாலும், நீரும் சேர்த்துகுக்கரில் வேகவிடுங்கள். முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து,அந்த விழுதை பாலுடன் சேர்த்து சர்க்கரை போட்டு, வெந்த தினை அரிசியையும் நன்குகரண்டியால் மசித்துச் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்தவுடன் குங்குமப்பூவை பாலில்கரைத்து சேர்த்து, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் போட்டுஇறக்குங்கள்.இந்தப் பாயசம், பால் பாயசம் போலவே இருக்கும். ஒருமுறை சுவைத்தவர்கள், பிறகு விடவேமாட்டார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தினை அரிசி பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, முந்திரிப்பருப்பு, சேர்த்து, தினை, Recipies, சமையல் செய்முறை