நட்ஸ் பாயசம்

தேவையானவை: முந்திரிப்பருப்பு - 50 கிராம், பாதாம்பருப்பு - 50 கிராம், பிஸ்தா பருப்பு - 50கிராம், சர்க்கரை - ஒரு கப், நெய் - சிறிதளவு, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் (வறுத்து போட) -சிறிதளவு, ஏலக்காய்தூள் - சிறிதளவு, பால் - இரண்டரை கப், குங்குமப்பூ - சிறிது.
செய்முறை: மூன்று வகை பருப்புகளையும் முதல் நாள் இரவே நீரில் மூழ்கும்படி ஊறவிடுங்கள்.மறுநாள் நீரை வடித்துவிட்டு, பாதாம், பிஸ்தா பருப்புகளின் தோல் நீக்கி, மிக்ஸியில் விழுதாகஅரைத்தெடுங்கள். அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்குகொதித்து ஒன்று சேர்ந்தவுடன் முந்திரி, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப்போட்டு, ஏலத்தூளையும்போட்டு இறக்கும் முன், குங்குமப்பூ தூவி இறக்குங்கள்.உடல் இளைத்தவர்கள், குழந்தைகள் போன்றோருக்கு இந்த பாயசத்தை அடிக்கடி செய்துகொடுக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்ஸ் பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, சிறிதளவு, Recipies, சமையல் செய்முறை