சேமியா-ரவை பாயசம்
தேவையானவை: ரவை - கால் கப் (அல்லது) ஜவ்வரிசி - கால் கப், சேமியா - அரை கப்,சர்க்கரை - ஒன்றேகால் கப், நெய் - அரை கப், பால் - அரை கப், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் -தேவைக்கேற்ப, ஏலக்காய்தூள் - சிறிதளவு.
செய்முறை: ரவையை வறுத்து ஒன்றேகால் கப் தண்ணீரில் வேகவிடுங்கள். பிறகு சேமியாவையும்வறுத்து அதனுடன் போட்டு வேகவிடவேண்டும். வெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து நன்குகொதிக்கவையுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப் போடுங்கள். பொடித்தஏலக்காயைப் போட்டு இறக்குங்கள். ரவைக்கு பதில் ஜவ்வரிசியையும் சேர்த்து இந்த பாயசத்தைசெய்யலாம். ஆனால், ஜவ்வரிசி, சேமியா காம்பினேஷன் வழக்கமான ஒன்று என்பதால், ரவைசேர்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா-ரவை பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, , Recipies, சமையல் செய்முறை