மிக்ஸ்டு வெஜிடபிள் பாயசம்
தேவையானவை: சிறு பீட்ரூட் - 1, காரட் - 1, பச்சைப் பட்டாணி - இருபது, காலிஃப்ளவர் - சிலதுண்டுகள், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - தலா சிறிதளவு, பால் - 4 கப், கண்டென்ஸ்டு மில்க் - ஒருசிறிய கப், சர்க்கரை - 2 கப், குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: காய்கறிகளை நன்கு கழுவி தோல் சீவி மிக மிக சிறிய துண்டுகளாக மெல்லியதாகநறுக்குங்கள். நறுக்கியதை ஆவியில் வேக வைத்து மசித்துக்கொள்ளுங்கள். பிறகு பாலுடன்சர்க்கரையைச் சேர்த்து நன்கு சுண்டக் காய்ச்சி, அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். நன்கு கொதித்தவுடன் வேகவைத்து மசித்த காய்கறிகளை போட்டுகொதிக்கவிடுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப்போட்டு,பொடித்த ஏலமும் போட்டு இறக்குங்கள். மேலே குங்குமப்பூவை தூவி விடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிக்ஸ்டு வெஜிடபிள் பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, நன்கு, Recipies, சமையல் செய்முறை