பிரெட் பாயசம்

தேவையானவை: பிரெட் - 4 ஸ்லைஸ், சர்க்கரை - சுவைக்கேற்ப, முந்திரிப்பருப்பு -தேவைக்கேற்ப, ஏலம் பொடித்தது - சிறிதளவு, பால் - 4 கப், குங்குமப்பூ - சிறிது, நெய் - 2டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக்கி நெய்யில் நன்கு வறுத்து எடுங்கள். பிறகு அதைமிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். பொடித்ததை அளந்துகொண்டு, அதே அளவு சர்க்கரைஎடுத்துக்கொள்ளுங்கள். பிரெட்டுடன் சர்க்கரையையும், பாதி பாலையும் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.கெட்டியாக ஆனவுடன் மீதி பாலை சிறிது சிறிதாக சேருங்கள். பால் கூடுதலாக விட்டால் சுவையாகஇருக்கும். கடைசியில் நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டு, பொடித்த ஏலமும் போட்டுஇறக்குங்கள். மேலே குங்குமப்பூவை தூவி பரிமாறுங்கள். பிரெட் பாயசம் என்று யாராலும்கண்டுபிடிக்கவே முடியாது. விரைவாக தயாரிக்கக்கூடிய ருசியான பாயசம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரெட் பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, , Recipies, சமையல் செய்முறை