ஆரஞ்சு பாயசம்

தேவையானவை: பால் - 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் - 3, சர்க்கரை - முக்கால் கப்,கண் டென்ஸ்டு மில்க் - அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் - சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர்- ஒரு சிட்டிகை.
செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள்.கலர்ஃபுல்லான இந்த பாயசம் குழந்தைகள் விரும்பி அருந்தக்கூடியது. இதை குளிர வைத்துசாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். பிறகு, ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில்கரைத்து பாலில் சேர்த்து, கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள்.ஆறியதும் எஸன்ஸ் சேர்த்துக் குளிரவையுங்கள். ஆரஞ்சுப் பழத்தை தோலுரித்து விதை நீக்கி சிறுதுண்டுகளாக்குங்கள். அவற்றைப் பாலில் சேர்த்து, மேலும் குளிரவைத்துப் பரிமாறுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரஞ்சு பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, சேர்த்து, பாலில், ஆரஞ்சு, Recipies, சமையல் செய்முறை