பாலக்-குடமிளகாய் தால்
தேவையானவை: பருப்பு - 2 கப் (எந்த பருப்பு வேண்டுமானாலும்), பொடியாக நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப், பச்சை மிளகாய் - 3, கரம்மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - தாளிப்பதற்கு தேவையான அளவு, மாங்காய் துண்டு(பெரியது) - 1, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பருப்புகளையும், மாங்காயையும் சேர்த்துகுக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். (குழைய வேண்டாம்). கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, சீரகம் வெடித்ததும், குடமிளகாய் போட்டு வதக்கி, 2 நிமிடம் கழித்து கரம்மசாலாதூள் போட்டு கிளறவும். வெந்த பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ளகீரையை சேர்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும். சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சாப்பிடவும்.குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக வெந்தயக்கீரை, முள்ளங்கி கீரை சேர்க்கலாம். பருப்புகளுக்குபதிலாக முளைகட்டிய பயறும் சேர்க்கலாம். கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவேஊறவைத்து, மறுநாள் வேகவைத்தும் இந்த தால் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலக்-குடமிளகாய் தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, , Recipies, சமையல் செய்முறை