முளைப்பயறு தால்
தேவையானவை: வெங்காயம் - 1, பாசிப்பயறு (முளை கட்டியது) - அரை கப், தனியாதூள் -அரை டீஸ்பூன், மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு (தேவையானால்) - 2பல், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: பயறை வேகவிடவும். முக்கால் பாகம் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மீதியைமிக்ஸியில் தனியாதூள், உப்பு, இஞ்சி சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். கடாயில்எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும். வெந்தபருப்பையும் சேர்க்கவும். சிறிது நேரம் நன்றாக கிளறவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிதூவி அலங்கரிக்கவும். சப்பாத்தியுடன் சாப்பிட அருமையான சைட் டிஷ் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முளைப்பயறு தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, , Recipies, சமையல் செய்முறை