ஆலு தால்

தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பாசிப்பருப்பு - அரை கப், தக்காளி - 2, பச்சைமிளகாய் - 50 கிராம், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் - 2டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, தனியாதூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச்சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும். கடாயில் எண்ணெய்விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை 5 நிமிடம் வறுக்கவும். தனியாதூள், மசாலாதூள், மிளகு,உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும். மற்றொரு கடாயில்சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2நிமிடம் கொதிக்கவிடவும். வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 2, 3 நிமிடம்கிளறவும். கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறுகிளறி இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆலு தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, போட்டு, டீஸ்பூன், உருளைக்கிழங்கு, Recipies, சமையல் செய்முறை