தால் ஃப்ரை
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1,தக்காளி - 1, கடுகு, வெந்தயம், சீரகம், தனியா - நான்கும் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒருடீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - 2டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளி, மல்லித்தழை, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். பருப்பை வேகவிட்டு, கரண்டியின் பின்புறத்தால் நன்றாகமசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வெந்தயம், சீரகம், தனியாஇவற்றைப் போட்டு வறுக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, துருவின இஞ்சி போட்டு, 5-லிருந்து7 நிமிடம் வதக்கவும். ஆம்சூர் பொடி அல்லது எலுமிச்சம்பழ சாறு, மிளகாய்தூள் சேர்த்து மேலும்2 நிமிடம் கிளறவும். வெந்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.புலவு, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட ஏற்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தால் ஃப்ரை, 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, டீஸ்பூன், மல்லித்தழை, அல்லது, தக்காளி, Recipies, சமையல் செய்முறை