அரிசி ரவா உப்புமா
தேவையானவை: அரிசி ரவை-ஒரு கப், பெரிய வெங்காயம்-1, தக்காளி-1, பச்சை மிளகாய்-2,(விருப்பமான) காய்கறி கலவை-அரை கப், பெருங்காயம்-அரை டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு,எலுமிச்சம்பழச் சாறு-2 டீஸ்பூன், துவரம்பருப்பு (அ) கடலைப்பருப்பு-கால் கப்,உப்பு-தேவைக்கேற்ப.தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு-ஒரு டீஸ்பூன்,எண்ணெய்-3 டீஸ்பூன்.
செய்முறை: பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, காய்கறி ஆகியவற்றைப்பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். துவரம்பருப்பை ஊறவையுங்கள். குக்கரில் எண்ணெயைக்காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன்னிறமானதும், வெங்காயம், மிளகாய் சேர்த்துசிட்டிகை உப்பும் சேர்த்து சிறிது வதக்கி, இரண்டரை கப் தண்ணீர் சேருங்கள். அத்துடன்தேவையான உப்பு, காய்கறி, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு பெருங்காயம், துவரம்பருப்புசேர்த்து கொதிக்கும் பொழுது அரிசி ரவை சேர்த்து குக்கரை மூடி, குறைந்த தீயில் வெயிட்போடாமல் 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு வேகவிட்டு இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரிசி ரவா உப்புமா, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், சேர்த்து, காய்கறி, வெங்காயம், Recipies, சமையல் செய்முறை