உசிலி
தேவையானவை: நல்ல பிஞ்சான பீன்ஸ் அல்லது புடலங்காய் அல்லது கொத்தவரங்காய் - 150கிராம், கடலைப்பருப்பு-அரை கப், துவரம்பருப்பு-அரை கப், காய்ந்த மிளகாய்-3, சோம்பு-அரைடீஸ்பூன் (அல்லது) பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, எலுமிச்சம்பழச்சாறு-2 டீஸ்பூன், மல்லித்தழை-சிறிதளவு, கடுகு-அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன்,எண்ணெய்-2 டீஸ்பூன்.
செய்முறை: பருப்புகள் அனைத்தையும் ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். காய்கறிகளை மிகவும்பொடியாக நறுக்கி, சிறிது உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை குக்கரில்வைத்து இறக்குங்கள். பிறகு விசிலை எடுத்து, பிரஷரை வெளியேற்றிய பின், மூடியைத் திறந்துவையுங்கள். ஊறிய பருப்புகளை மிளகாய், உப்பு, சோம்பு அல்லது பெருங்காயம் சேர்த்துகரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவையுங்கள்.வெந்துவிட்டதா என்று பார்க்க, ஒரு கரண்டிக் காம்பு அல்லது கத்தியை அந்தக் கலவையில்நுழைத்து எடுத்தால், ஒட்டாமல் வரும். பிறகு, வெந்த கலவையை ஆறவிட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள். உதிர்ப்பது சிரமமாக இருந்தால், மிக்ஸியில் போட்டு, ‘விப்பர்’ பட்டன் உபயோகித்துஉதிர்க்கலாம். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் வெந்த காய்கறி,உதிர்த்த பருப்பு, எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உசிலி, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, அல்லது, டீஸ்பூன், உப்பு, Recipies, சமையல் செய்முறை