தக்காளி வெங்காயம் இல்லாத குழம்பு
தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், சௌசௌ - 1, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், புளி -நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு. தாளிக்க: கடுகு - அரைடீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். சௌசௌவை தோல்,விதை நீக்கி துண்டுகளாக நறுக்குங்கள். பருப்பில் சௌசௌ, சாம்பார் பொடி, பெருங்காயம்,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வேகவிட்டு புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிசேருங்கள். புளி பச்சை வாசனை போக கொதித்த பிறகு, தாளிக்கும் பொருட்களை தாளித்துசேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி வெங்காயம் இல்லாத குழம்பு, 30 வகையான குழம்பு, 30 Type Kuzhambu, டீஸ்பூன், கறிவேப்பிலை, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை