மாம்பழ புளி மிளகாய் குழம்பு
தேவையானவை: நன்கு பழுத்த மாம்பழம் - 1, புளி - எலுமிச்சை அளவு, சின்ன வெங்காயம் -அரை கப், பச்சை மிளகாய் - 12 (அல்லது) மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், தக்காளி - 4, மஞ்சள்தூள்- அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிது. தாளிக்க: கடுகு - அரைடீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் கப்.வறுத்துப் பொடிக்க: வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சரிசி - ஒருடீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாக நறுக்குங்கள். மாம்பழத்தை தோலுடன் சற்றுபெரிய துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாய் போடுவதானால் சற்று பெரியதுண்டுகளாக்குங்கள். புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் உப்பு,மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து கரையுங்கள்.எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மிளகாய்சேர்த்துக் கிளறுங்கள். இது நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து மாம்பழத் துண்டுகளைசேருங்கள். நன்கு கொதித்து சேர்ந்தாற்போல ஆனதும் பொடித்த பொடியை தூவிக் கிளறிஇறக்குங்கள்.மாம்பழத்தின் மணமும் சுவையும் குழம்பில் சேர்ந்து, அலாதியான ருசியைக் கொடுக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாம்பழ புளி மிளகாய் குழம்பு, 30 வகையான குழம்பு, 30 Type Kuzhambu, டீஸ்பூன், வெந்தயம், கறிவேப்பிலை, நன்கு, Recipies, சமையல் செய்முறை