தட்டி செய்யும் குழம்பு

தேவையானவை: தக்காளி - 3, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன். தட்டிக்கொள்ள: பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 8 பல், கறிவேப்பிலை -சிறிது, மல்லித்தழை - சிறிது. வறுத்துப் பொடிக்க: மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்த - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் -கால் கப்.
செய்முறை: தட்டிக் கொள்ள வெண்டிய பொருட்களை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக தட்டிஎடுத்துக்கொள்ளுங்கள். அம்மி இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு விப்பர் பிளேடால் இரண்டுமுறை ஒன்றிரண்டாக வருமாறு அடித்துக்கொள்ளலாம். இரண்டரை கப் தண்ணீரில் புளியைக்கரைத்து வடிகட்டுங்கள். புளித் தண்ணீரில் தக்காளி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள்தூள்உப்பு சேர்த்து நன்கு கரைத்துகொள்ளுங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து நன்குபொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து,பொன்னிறமானதும், தட்டி வைத்துள்ள வெங்காயக் கலவையை அதனுடன் சேருங்கள். இது நன்குவதங்கியபின், புளிக்கரைசலை சேருங்கள். நன்கு கொதித்து பச்சை வாசனை போனபின், பொடித்துவைத்துள்ள பொடியை தூவி, கிளறி இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தட்டி செய்யும் குழம்பு, 30 வகையான குழம்பு, 30 Type Kuzhambu, டீஸ்பூன், பொருட்களை, Recipies, சமையல் செய்முறை