கோஸ் மசாலா கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,கோஸ் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பட்டை - ஒருதுண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, தேங்காய்த்துருவல் - ஒருடேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, கொத்துமல்லி - சிறிது.தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்,சீரகம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: முதலில் வெங்காயத்தை வதக்கிவைத்துக்கொள்ளவும். பிறகு பாசிப்பருப்பை வேகவைக்கவும்.முக்கால் பதம் வெந்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள கோஸைபோடவும். இரண்டும் சேர்ந்து வெந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய்இவைகளை வறுத்து தேங்காய் வைத்து அரைத்து வெந்த கலவையில் கொட்டவும். பின்னர் வதக்கியவெங்காயத்தையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து கடுகு, கொத்துமல்லி தாளித்துகொட்டவும். சப்பாத்திக்கு நல்ல சைட்-டிஷ் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோஸ் மசாலா கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை