காலிஃப்ளவர்-கேரட் கூட்டு
தேவையானவை: காலிஃப்ளவர் (உதிர்த்தது) - ஒரு கப், கேரட்(நறுக்கியது) ஒரு கப்,துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+பாசிப்பருப்பு (மூன்றும் சேர்த்து)- அரை கப், தனியா - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் -ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் -3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: மூன்று பருப்புகளையும் ஒன்றாக சேர்த்துவேகவைக்கவும். காலிஃப்ளவர், கேரட் இரண்டையும் சேர்த்துஒன்றாக வேக வைக்கவும். பிறகு தனியா, சீரகம் இரண்டையும் வறுத்து, தேங்காய் துருவல், பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். காய்கறிக் கலவை வெந்ததும் அரைத்த விழுதையும் வெந்தபருப்புகளையும் சேர்த்து கொதிக்க வைத்து தாளித்து இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலிஃப்ளவர்-கேரட் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், சேர்த்து, Recipies, சமையல் செய்முறை