உருளைக்கிழங்கு குழம்பு
தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - 1, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், தக்காளி - 1,புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, சாம்பார்பொடி - 4 டீஸ்பூன்.விழுதாக அரைக்க: துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2, சோம்பு - கால் டீஸ்பூன், பூண்டு -2 பல்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், வெந்தயம் -15, பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பூண்டு + வெங்காயத்தின் தோலை உரித்தெடுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைப்பவற்றைஅரைத்தெடுக்கவும். புளி + உப்பை 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, அத்துடன் சாம்பார்பொடியை கலக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து தாளிப்பவற்றை தாளித்து பூண்டு +வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி + உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கரைத்த புளி +சாம்பார்பொடி கலந்த நீரை அதில் ஊற்றி நன்கு கொதித்து சற்று கெட்டியானதும் அரைத்த விழுதை சேர்த்துகொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளைக்கிழங்கு குழம்பு, 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, டீஸ்பூன், பூண்டு, புளி, Recipies, சமையல் செய்முறை