சிறுகிழங்கு ரோஸ்ட்
தேவையானவை: சிறுகிழங்கு - கால் கிலோ.அரைப்பதற்கு: காய்ந்த மிளகாய் - 7 லிருந்து 8, சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, சின்னவெங்காயம் - 2.பிசறுவதற்கு: பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.பொரிக்க: எண்ணெய் - ஒன்றரை கப்
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும். சிறுகிழங்கை மண் போகக்கழுவி குக்கரில் 10 நிமிடங்கள் வேகவைத்து, தோலை உரித்து நான்காக நறுக்கவும். அரைத்த விழுதையும்அரிசி மாவு, உப்பையும் கிழங்கு துண்டுகளில் சேர்த்துப் பிசறவும். 10 நிமிடங்கள் கழித்து வாணலியில்எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மொறுமொறுவென பொரித்து எடுக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுகிழங்கு ரோஸ்ட், 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, , Recipies, சமையல் செய்முறை