உருளைக்கிழங்கு ரோஸ்ட்

தேவையானவை: பெரிய உருளைக் கிழங்கு - 3.அரைப்பதற்கு: மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பூண்டு- 1 பல், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.தாளிக்க: எண்ணெய் - கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்.
செய்முறை: உருளையை தோலுடன் கழுவி, நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கவும். அதில்அரைத்தவற்றை பிசறவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளித்து அதில் பிசறிய துண்டுகளை போட்டு நன்குசுருள வேகவைத்து எடுக்கவும் (இது பார்ப்பதற்கு ஃபிஷ் ஃப்ரை மாதிரி இருக்கும்). அடுப்பை குறைந்ததணலில் வைத்து வேக வைக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளைக்கிழங்கு ரோஸ்ட், 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை