மினி ஆலு மசாலா

தேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு - 12, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 1, பட்டை - சிறிது,ஏலக்காய் - 1, கிராம்பு - 1 (மூன்றும் சேர்ந்து பொடித்தது) - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்,மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, வேகவைத்த சின்ன உருளை - 2, மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளி - அரைநெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - கால் டம்ளர், பொடித்த வெல்லம் - 2டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும்,தக்காளியையும் பொடியாக நறுக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு மூன்றையும் சேர்த்து பொடித்த பொடி,சீரகம், மஞ்சள்தூள், வேகவைத்த 2 உருளைக்கிழங்கு (தோல் உரித்தது), வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில்போட்டு அரைத்தெடுக்கவும். புளி + உப்பை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்துகரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போகவதக்கி, தக்காளியையும் சேர்த்து உருத்தெரியாமல் வதக்கவும். பின் மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறிபிறகு புளிக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும். வேகவைத்த கிழங்கை அத்துடன் சேர்த்து கிளறி சற்றுகெட்டியானதும் இறக்கி, பொடியாக அரிந்த வெங்காயம் + மல்லித்தழை தூவி பரிமாறவும். இது சப்பாத்தி,பரோட்டா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட்-டிஷ் ஆகும்.உருளைக்கிழங்கு-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மினி ஆலு மசாலா, 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, சேர்த்து, வேகவைத்த, டீஸ்பூன், வெங்காயம், உருளைக்கிழங்கு, Recipies, சமையல் செய்முறை