உருளைக்கிழங்கு மசாலா சிப்ஸ்
தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - 2, மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், பச்சரிசி மாவு - 4டீஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப, வெறும் வாணலியில் பொரித்த வெள்ளை எள் - அரை டீஸ்பூன்,பாயச பவுடர் - அரை சிட்டிகை, எண்ணெய் - ஒன்றரை கப்.
செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, கழுவி, பின் பெரிய கண் உடைய ஸ்கிராப்பரில் நீளவாட்டில்மெல்லிய தகடுகளாக சீவிக் கொள்ளவும். மிளகாய்தூள், உப்பு, பச்சரிசி மாவு, எள் ஆகியவற்றை ஒன்றாகக்கலந்து சிறிது நீர் தெளித்து, உருளைக்கிழங்குடன் பிசறவும். பின்னர் வாணலியில் எண்ணெயை சுடவைத்துநன்கு சூடானதும் பிசறிய கிழங்குத் துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் உதிர்த்துவிட்டுரோஸ்டாக பொரித் தெடுக்கவும். விருந்துகளில் பரிமாறினால், முதலிடம் பெறும் அயிட்டம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளைக்கிழங்கு மசாலா சிப்ஸ், 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, , Recipies, சமையல் செய்முறை