அங்காய கஞ்சி
தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் - ஒரு டீஸ்பூன், மணத்தக்காளி வற்றல் - ஒரு டீஸ்பூன், உலர்ந்த வேப்பம்பூ - ஒரு டீஸ்பூன், சுக்கங்காய் வற்றல் - ஒரு டீஸ்பூன் (இவை எல்லாமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்), பச்சை கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மோர் - ஒரு கப்.
செய்முறை: எல்லா வற்றல்களையும் வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பச்சைக் கறிவேப்பிலையை லேசாக (கருகிவிடாமல்) சூடான வாணலியில் புரட்டி எடுத்துவிட்டு, அதையும் பெருங்காயத்தையும் வறுத்த வற்றல்களுடன் சேர்த்துப் பொடிக்கவும். மோரில் இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் போட்டு, உப்பு சேர்த்துக் கலக்கிக் குடிப்பது ஒரு வகை. ஒரு கப் வெந்நீரில், வற்றல் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுக் கலக்கி மூடிவைத்தால், ஒரு மணி நேரத்தில் தெளிந்து நிற்கும். இந்தத் தெளிவை இறுத்து, அதில் மோர், உப்பு சேர்த்து அருந்துவது இன்னொரு வகை. வயிற்றில் பூச்சி, வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கஞ்சி மிகவும் நல்லது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அங்காய கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, டீஸ்பூன், வற்றல், உப்பு, Recipies, சமையல் செய்முறை