வெந்தய கஞ்சி

தேவையானவை: வெந்தயம் - கால் கப், மோர் - 1 கப், இஞ்சி (தோல் சீவியது) - விரல் நீளம், பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெந்தயத்தை, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து வேகவிடவும். இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். வெந்தயம் வெந்ததும் எடுத்து, மோர், இஞ்சி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து அருந்தவும்.
நீரிழிவு, அல்சர் போன்ற நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி இந்தக் கஞ்சியை செய்து தரலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய காபி நல்லது. மேலே சொன்னது போல வெந்தயத்தை வேகவிட்டு, மேலே தெளிந்து நிற்கும் நீருடன் பால், சர்க்கரை சேர்த்து காபியாக பருகலாம். இதே வெந்தய நீரில் புழுங்கலரிசி ரவை அல்லது பாம்பே ரவை அல்லது சேமியா சேர்த்து வேகவிட்டு, உப்பு சேர்த்து சாப்பிட்டால் சத்தான மாலை உணவு. உடம்புக்கு குளிர்ச்சி தரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெந்தய கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, சேர்த்து, உப்பு, Recipies, சமையல் செய்முறை