மசாலா பால் கஞ்சி

தேவையானவை: பாதாம் - 4, பிஸ்தா - 4, அக்ரூட் - 2, ஜாதிக்காய், மாசிக்காய் சேர்த்துப் பொடித்த பொடி - 2 சிட்டிகை, பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - 5 கீறல்.
செய்முறை: பாலைக் காய்ச்சிக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, அக்ரூட் மூன்றையும் சர்க்கரை சேர்த்து, கால் கப் சூடான பாலில் ஊறவைக்கவும். சிறிது நேரத்தில் ஊறியதும், அவற்றை அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதை, மீதி இருக்கும் பாலில் கலந்து, ஜாதிக்காய், மாசிக்காய் பொடி சேர்த்து அப்படியே அருந்தலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது உலர்பழங்கள், ஜெம்ஸ் போன்ற கலர் மிட்டாய்கள் போட்டுக் கொடுக்க, கண்களுக்கும் விருந்தாகும். பாலில் இந்த விழுதைக் கலந்து, ஆப்பம், இடியாப்பம் போன்ற பலகாரங்களின் மீது ஊற்றி சாப்பிடுவது இன்னொரு வகை.
அயல்நாடுகளில், ‘பாரிட்ஜ்’ என்று விரும்பிச் சாப்பிடும் இந்தக் கஞ்சி, கொஞ்சம் ‘காஸ்ட்லி’யானது என்றாலும், வாரம் ஒருமுறையேனும் கண்டிப்பாக அருந்த வேண்டிய கஞ்சி. இரவில் இதை அருந்தினால், நல்ல தூக்கம் வரும். மூளைக்கும் மனசுக்கும் அமைதி கிடைக்கும். சருமத்துக்கு பளபளப்பு கொடுக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மசாலா பால் கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, பாலில், Recipies, சமையல் செய்முறை