சம்பா கோதுமை கஞ்சி
தேவையானவை: சம்பா கோதுமை மாவு - 3 டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஓமம், சுக்கு, சீரகம், மிளகு - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - அரை மூடி அல்லது கசகசா - சிறிதளவு, சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2.
செய்முறை: ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.
பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும். வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும். குழந்தைகளுக்குக் கொடுப்பதானால், சிறிது கசகசாவை வறுத்து, சிறிது சர்க்கரை, 2 ஏலக்காய் (தோல் நீக்கியது) சேர்த்து பொடிசெய்து, அதில் சில துளிகள் பால் அல்லது நெய் விட்டு, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொண்டு, கோதுமைக் கஞ்சியில் மிதக்கவிட்டு கொடுக்கலாம். விரும்பிக் குடிப்பார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சம்பா கோதுமை கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, சிறிது, மிளகு, Recipies, சமையல் செய்முறை