டூ இன் ஒன் கஞ்சி

தேவையானவை: பார்லி - அரை கப், கொள்ளு - அரை கப், சுக்குப் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மோர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 1, எலுமிச்சம்பழம் - அரை மூடி.
செய்முறை: பார்லியையும் கொள்ளையும் கல் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு அப்படியே மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். அந்த மாவில் 3 டீஸ்பூன் எடுத்து, வெறும் வாணலியை சூடுபடுத்தி வறுக்கவும். கருகிவிடாமல் வறுபட்டதும், அதில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்கவிடவும். (கட்டிபடாமல் இருக்க, முதலில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறிவிட்டு, பிறகு மீதித் தண்ணீரை சேர்க்கவும்). மாவு வெந்ததும் இறக்கி, உப்பு, மோர், சுக்குப்பொடி சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து அருந்தவும். எடையைக் குறைக்கக்கூடிய எளிய கஞ்சி இது.
இதிலேயே, வெந்த மாவில், ஒரு கப் பால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால், உடற்பயிற்சி போன்றவற்றால் இழந்த எடை கூடும்.
எடையைக் கூட்ட, குறைக்க என இரண்டுக்கும் பயன்படும் ‘டூ இன் ஒன்’ கஞ்சி இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டூ இன் ஒன் கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை