கலவை கஞ்சி
தேவையானவை: புழுங்கலரிசி - அரை கப், கோதுமை - அரை கப், பொட்டுக்கடலை - அரை கப், மக்காச்சோளம் - அரை கப், கேழ்வரகு - அரை கப், கம்பு - அரை கப்.
செய்முறை: பொட்டுக்கடலை தவிர மீதி தானியங்களை வாசம் வர வறுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து மிஷினில் கொடுத்து, ஒன்றாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும். காலையில் இந்தக் கஞ்சி மாவிலிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து, லேசாக வெந்நீர் விட்டுக் கட்டியில்லாமல் கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதன் நடுவே கஞ்சி மாவு கலக்கிய கிண்ணத்தை வைத்தால் போதும், மாவு வெந்துவிடும்.(வறுத்து அரைத்திருப்பதால், அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தேவையில்லை). அதில் உங்கள் விருப்பம் போல மோர், உப்பு அல்லது பால், சர்க்கரை கலந்து பருகலாம். ‘சத்துமாவுக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்தக் கலவைக் கஞ்சி, அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலவை கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, கஞ்சி, Recipies, சமையல் செய்முறை