கோதுமை ரவை கஞ்சி
தேவையானவை: கோதுமை ரவை - அரை கப், தண்ணீர் - ஒரு கப், (விருப்பப்பட்டால்) பொடியாக துருவிய பீன்ஸ் - சிறிதளவு, ஆய்ந்த வெந்தயக் கீரை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தண்ணீரைக் கொதிக்கவைத்து, கோதுமை ரவையைச் சேர்க்கவும். அத்துடன் வெந்தயக்கீரை, துருவிய பீன்ஸையும் சேர்க்கவும். சில நிமிடங்களிலேயே ரவை வெந்துவிடும். இத்துடன் உப்பு சேர்த்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அருமையான காலை உணவு இது. சர்க்கரை இல்லாதவர்களும் இந்தக் கஞ்சியில் அரை கப் பால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தி மீந்து போனால், அதை சிறு துண்டுகளாக்கவும். ஒரு கப் பாலை 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டு ஊறவைத்து, சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பர் ‘வீட் சீரியல்’ இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோதுமை ரவை கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, சர்க்கரை, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை