பொருள் விளங்கா உருண்டை

தேவையானவை: வேர்க்கடலை - 1 கப், எள் - 1 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - கால் கப், தேங்காய்(பல்லுப் பல்லாகக் கீறியது) - 2 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - அரை கப்,வெல்லம் - முக்கால் கப், சுக்குத்தூள் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். எள்ளை சுத்தம் செய்து, வெறும்கடாயில் பொரியும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். நெய்யில் தேங்காயை நன்கு சிவக்க வறுத்தெடுங்கள்.பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுத்து, ஒன்றிரண்டாகப்பொடித்துக்கொள்ளுங்கள்.அரிசி மாவு, வெல்லம் நீங்கலாக எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வெல்லத்தைப் பொடித்து,கால் கப் தண்ணீர் சேர்த்து வழக்கம் போல பதம் வந்ததும், கலந்து வைத்திருக்கும் பருப்பு, கடலைகலவையைப் பாகில் கொட்டி, கிளறி இறக்குங்கள். அரிசி மாவைத் தூவி, நன்கு கலந்து அழுத்தமானஉருண்டை பிடியுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருள் விளங்கா உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, டேபிள்ஸ்பூன், அரிசி, Recipies, சமையல் செய்முறை