கமர்கட்

தேவையானவை: தேங்காய் துருவல் - 1 கப் (அழுத்தி அளக்கவேண்டும்), வெல்லத்துருவல் - 2 கப், நெய் -1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெல்லத்துருவலை கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரையவிட்டு வடிகட்டி,மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய் சேர்த்து நன்கு கிளறுங்கள். (பாகாக ஆகும் வரை விடாமல், வெல்லக்கரைசல் கொதித்ததுமே தேங்காயைப் போடவேண்டும்). இது சுருண்டு வரும் சமயம், நெய் சேர்த்து மேலும்நன்கு கிளறி இறக்கி, ஆறி இறுகுவதற்குள் வேகமாக உருட்டுங்கள்.கை சூடு பொறுக்கவில்லை எனில், முதலில் கைக்கு வருவது போல உருட்டிப் போட்டுவிட்டு, பிறகு அழுத்திஉருண்டை வடிவமாக உருட்டிப் போடலாம். தெங்காய், வெல்ல மணத்துடன் வெகு ஜோராக இருக்கும் இந்தகமர்கட்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கமர்கட், 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை