ஃப்ரூட் அண்ட் நட் உருண்டை

தேவையானவை: பேரீச்சம்பழம் - அரை கப், பாதாம், முந்திரி, அக்ரூட் (மூன்றையும் வாசம் வர வறுத்துப்பொடியாக நறுக்கிய கலவை) - அரை கப், வெனிலா எசன்ஸ் (விருப்பப்பட்டால்) - சில துளிகள்,நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன் அல்லது பனங்கற்கண்டு - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி, எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு விப்பர்பிளேடால் நன்கு அடித்துக்கொள்ளுங்கள். ரொம்ப நைஸாக அரைபட்டுவிடாமல், ஒன்றும் பாதியுமாகஉடைக்கவேண்டும்.பிறகு அந்தக் கலவையை ஒரு தட்டில் கொட்டி, அழுத்திப் பிசைந்து, சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.பிறந்தநாள் விழாக்களில் பிடித்து வைத்தால், நிமிடத்தில் காலியாகும் இந்த உருண்டை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஃப்ரூட் அண்ட் நட் உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை