தேங்காய் கசகசா உருண்டை
தேவையானவை: தேங்காய் துருவல் - 1 கப், ரவை - 1 டேபிள்ஸ்பூன், கசகசா - 1 டேபிள்ஸ்பூன்,பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், நெய் - 2டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, தேங்காயை வறுத்துக்கொள்ளுங்கள். கசகசா, ரவை ஆகியவற்றைதனித்தனியே வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள்.பொட்டுக்கடலையையும் ரவை போலப் பொடியுங்கள். சர்க்கரை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக்கலந்துகொள்ளுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் வைத்து, பாகுவைத்து (பிசுக்கு பதம்) இறக்கி, கலந்துவைத்ததைக் கொட்டிக் கிளறுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய் கசகசா உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, டேபிள்ஸ்பூன், Recipies, சமையல் செய்முறை