நெல் பொரி உருண்டை

தேவையானவை: நெல்பொரி - 4 கப், வெல்லத்தூள் - 1 கப், சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1டீஸ்பூன்.
செய்முறை: நெல்பொரியில் மேலிருக்கும் உமியை நீக்கி, சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெல்லத்தைப் பொடித்து,கால் கப் தண்ணீர் சேர்த்து, முன் சொன்ன முறையில் பாகு வையுங்கள்.பாகு கொதிக்கும்போது சர்க்கரையையும் அதோடு சேர்த்து, கொதிக்கவிடுங்கள். பதம் வந்ததும் இறக்கி,பொரியைக் கொட்டி, நெய் சேர்த்து, உருண்டை பிடித்து வையுங்கள். நெய் சேர்ப்பதால், உருண்டைபளபளப்பாக இருக்கும்.குறிப்பு: ஒரு கப் வெல்லத்துக்கு, எப்போதுமே கால் கப் தண்ணீர்தான் அளவு. அரை கப் வைத்தாலும் நன்றாகஇருக்கும். ஆனால், அதிக நேரம் கொதிக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெல் பொரி உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, சேர்த்து, நெய், Recipies, சமையல் செய்முறை